அம்பாறை மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான அலியார்முஸம்மில் இன்று காலை காலமானார்.
புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவிற்கு செல்வதற்காக கொழும்பு நிலையில் தீடிரென சுகயீனமடைந்த இவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இன்றுகாலை அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையிலேயே இவர் காலமானார்.
இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு அவரது சொந்த ஊரான சாய்ந்தமருதில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இவர், கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும் கல்முனை வலய ஓய்வுபெற்ற சிங்கள பாட ஆசிரிய ஆலோசகரும் சாய்ந்தமருது மத்தியஸ்தர் சபையின் முன்னாள் தலைவரும் சாய்ந்தமருது பிரதேச அரச ஓய்வுதியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சமூக சேவையாளரும் கவிஞரும் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமாவார்.

Post a Comment