காத்தான்குடி குவைட் சிட்டி பகுதியில் 9 வயது சிறுமியொருவரை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்துவிட்டு அவரை கொன்ற சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது
மஞ்சந்தொடுவாய் - ஜின்னா வீதியைச் சேர்ந்த, சஹாப்தீன் பாத்திமா சீமா எனும் குறித்த சிறுமியின் சடலம், கொலை செய்யப்பட்டு பேக் ஒன்றால் கட்டி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (10-09-2014) பிற்பகல் சுமார் 4.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்போது சிறுமியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சிறுமியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய அதே பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபரான ரமழானை பொலிசார் தேடிவருகின்றனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் காத்தான்குடி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


Post a Comment