முஸ்லிம்களை சொந்த சகோதரர்களாக நடத்துகின்றேன் - முஸ்லிம் நாடுகளிடம் ஜனாதிபதி
Friday, September 26, 20140 comments
இலங்கை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் லயாட் அமீன் மதானியிடம் உறுதியளித்துள்ளார். முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நியூயோர்க்கில் வைத்து மதானியை சந்தித்துள்ளார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைச்சின் நாடுகளுடன் நெருங்கிய உறவுகளைப் பேண விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களை சொந்த சகோதரர்களாக நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மதானி மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். பல்லின மக்கள் ஐக்கியமான முறையில் சகவாழ்வுடன் வாழ்ந்து வருவதனை நேரில் பார்வையிடுமாறு கோரியுள்ளார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஓர் அங்கமாகவே இலங்கையை நோக்குவதாக மதானி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க விரும்புவதாகவும் தொடர்ந்தும் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சவூதி அரேபியாவிற்கு மீண்டும் விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்தவிற்கு மதானி கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையின் 14 தூதரகங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment