முஸ்லிம் பொறியியலாளருக்கு அணுசக்தி நிலைய பகுதியில் நுழைய தடை விதித்தது நீதிமன்றம்!
Wednesday, September 3, 20140 comments
அணுமின்சக்தி உலை அமைந்துள்ள பகுதியில் நுழைய முஸ்லிம் பொறியியலளருக்கு பிரான்ஸ் நாட்டு நீதிமனம் தடை விதித்துள்ளது. ஜிஹாதி அமைப்புடனான தொடர்பு இருப்பதாக கூறியே இந்த தடை விதித்துள்ளதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்நடவடிக்கைக்கு இஸ்லாமோஃபோபியாவே காரணம் என்று இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடுச் செய்யப்படும் என்றும் முஸ்லிம் பொறியியலாளரின் சட்டத்தரணி சஃபான் க்யூஸ் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
நீதிமன்றம் பெயரை வெளியிடாத 29 வயதான முஸ்லிம் பொறியியலாளர் 2012 ஆம் ஆண்டு முதல் அணுசக்தி பகுதியில் அமைந்துள்ள ஈ.டி.பியின் நொகண்ட் சர் ஸீனி அணுமின்நிலையத்தில் தொழில் புறிந்து வந்தார்.
பிரான்சில் ஆயுதக்குழு மற்றும் ராக்கில் போராட அழைப்பு விடுத்த இமாம் ஆகியோருடன் முஸ்லிம் பொறியியலாளருக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் குற்றம் சாட்டுகின்றன.
Post a Comment