இருவேறு குண்டு தாக்குதலி 20 பேர் பலி; பக்தாதில் பதற்றம்
Friday, September 5, 20140 comments
ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் நேற்று இரு வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பக்தாத்தின் கதமியா பகுதியில் கார்க்குண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டுள்ளது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய பக்தாத்தில் உள்ள பாதுகாப்பு அரண் ஒன்றை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
ஏற்கனவே ஈராக்கின் வடக்கு பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment