அரசாங்கத்தை விட்டு விலகுமாறு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை!
Thursday, September 25, 20140 comments
அரசாங்கத்தை விட்டு விலகுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் மூலம் அரசாங்கம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியமை வெளிச்சமாகியுள்ளது.
எனவே தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதில் பயனில்லை என சில அதி உயர் பீட உறுப்பினர்கள், கட்சியின் தலைமைத்துவத்திற்கு அறிவித்துள்ளனர்.
அரசாங்கத்தை விட்டு விலகுவது குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
கட்சியின் அதி உயர் பீட உறுப்பினர்கள் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நாளை நடைபெறவுள்ள கூட்டத்தின் போது முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் தொடர்ந்தும் ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பதில் எவ்வித பயனும் கிடையாது என சில சிரேஸ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அரசாங்கம் உரிய பதிலளிக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் ஆளும் கட்சிக்கான ஆதரவு குறித்த முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment