பாலியல் தொழிலை சட்டமாக்குமாறு அழுத்தம்: மகளிர் விவகார அமைச்சர் கவலை
Monday, August 25, 20140 comments
பாலியல் தொழிலை சட்டமாக்குமாறு வெளிநாடுகளின் நிதியில் இயங்கும் சர்வதேச அமைப்புகள் அழுத்தங்களை கொடுத்து வருவதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.
குருணாகல் மாவட்டம் தம்பதெனி, நாராம்மல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெண்கள் பற்றி பேசும் போது சிறிய பிரச்சினை ஒன்று உள்ளது. வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைக்கும் சர்வதேச தொண்டர் அமைப்புகளில் பணியாற்றும் சிறிய தரப்பு பெண்கள் உள்ளனர்.
இவர்கள் பெண்களின் உரிமைகளை பற்றி பேசுகின்றனர். ஆனால் பாலியல் தொழிலை சட்டமாக்குமாறு கோருகின்றனர்.
அதேவேளை உங்கள் நாட்டில் பெண்கள் விவகாரங்களை கையாள பெண்கள் இல்லையா என வெளிநாட்டுத் தூதரங்கள் கேட்கின்றன.
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டமாக்குமாறு அவர்களும் என்னிடம் கோரிக்கை விடுத்தனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment