யுத்த காலத்தில் ஞானசார போன்ற சண்டியர்கள் பதுங்கியிருந்தார்களா? – மேர்வின்
Tuesday, August 19, 20140 comments
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் போன்ற சண்டியர்கள் பதுங்கியிருந்தார்களா என பொதுமக்கள் அமைச்சர் மேர்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
படையினர் யுத்தம் செய்த காலத்தில் கலபொடத்தே ஞானசார தேரர் பற்றி கேள்விபட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னரே அனைத்து சண்டியர்களும் வெளியே இறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பணம் சம்பாதிக்கவும், அதிகாரத்தை பெருக்கிக் கொள்ளவுமே சிலர் காவி உடை அணிந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காவி உடை மற்றும் பௌத்த மதம் போன்றவற்றைப் பயன்படுத்தி இயக்கங்களை உருவாக்காது வேறும் எவ்வாறான பெயர்களைப் பயன்படுத்திக்கொண்டாலும் பரவாயில்லை என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
பாதுகாப்பு படையினரின் அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் 30 ஆண்டு கால யுத்தத்தை இல்லாதொழித்திருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பல்வேறு வழிகளில் அறைகூவி வரும் ஞானசார தேரர் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எங்கிருந்தார் என அமைச்சர் மேர்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளர்ர்.
படைவீரர்களின் அர்ப்பணிப்பினால் நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் பி;ன்னரே சண்டியர்கள் வெளியே வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment