முஸ்லிம் தீவிரவாதம் குறித்து கண்காணிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் சில குழுக்கள் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் அவை குறித்து கண்காணிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சிங்கள தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் சில தற்பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான சில குழுக்கள் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இனவாத சிந்தனைகள் அதிகரித்துள்ளதாகவும் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படாவிட்டால் மீளவும் இன முரண்பாடுகள் வெடிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் அடிப்படைவாத கொள்கைகளை முன்னெடுத்த சில குழுக்கள் மீள ஒருங்கிணைவதில் நாட்டம் காட்டி வருவதாகவும் அவர் சுட்க்காட்டியுள்ளார்.
மாணவர்களை கிளர்ச்சியில் ஈடுபடுத்த சிலர் முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பிரச்சினைகளின் காரணமாக தொடர்ந்தும் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் குழுக்கள் சில சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளுடன் வர்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளன:-
முஸ்லீம் குழுக்கள் சில சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளுடன் வர்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆமெரிக்காவின் சென்டர் போர் கொம்பிளெக்ஸ் ஒப்பரேசன்ஸ் என்ற அமைப்பிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இனக்குழுக்களிடையே மதவாதம் தலைதூக்குவதே யுத்தத்திற்கு பிந்திய இலங்கையின் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது. அதற்கு தீர்வு காணவிட்டால் எதிர்காலத்தில் இன ரீதியான பதட்ட நிலை தலைதூக்கலாம்
யுத்த காலத்தின் விடுதலைப்புலிகளால் முஸ்லீம்களும் பாதிக்கப்பட்டனர்,இதன் பின்னர் அவர்களை தங்களது பாதுகாப்பை தாங்களே உறுதிசெய்யத் தொடங்கினர், விடுதலைப்புலிகளின் தோல்விக்கு பி;ன்னர் இந்த குழுக்கள் தற்பாதுகாப்பு என்ற நிலையிலிருந்து விலகி சென்று செயற்படத்தொடங்கியுள்ளன. சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளுடன் இவர்கள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, இதனை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
பயங்கரவாதத்திற்கு அப்பால் இலங்கை இலங்கை கடந்த கால கிளர்ச்சிகளில் ஈடுபட்ட அமைப்புகளின் ஆபத்தையும் எதிர்நோக்குகிறது. அந்த அமைப்புகள் இலங்கைக்குள் தங்களை மறுபடி ஒன்றினைத்து தமது இடது சாரிகொள்கையை முன்னெடுக்க முயல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இவர்கள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய முகவர்களுடன் தொடர்பை ஏற்படடுத்துவதாகவும் தெரிய வருகின்றது.

Post a Comment