பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கிறார் பாலித தெவரப்பெரும

Monday, July 7, 20140 comments



பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை துறக்கப்போவதாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும அறிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை நாளை (08) பாராளுமன்ற அமர்வின்போது சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவப்பெரும தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மாஅதிபர் என்.கே. இலங்ககோன் கட்டாயமாக பதவி விலக வேண்டும் எனவும், அவர் அவ்வாறு பதவி விலகாவிடின் அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக பாலித்த தேவப்பெரும முன்னதாக அறிவித்திருந்தார்.

அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முழுப் பொறுப்பையும் பொலிஸார் ஏற்றுக் கொண்டு பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவப்பெரும குறிப்பிட்டிருந்தார். 
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham