மக்கள் பலத்தை அரசிற்கு காட்டும் தருணம் வந்துவிட்டது - ரணில்
Sunday, July 6, 20140 comments
மக்களின் பலத்தை இந்த அரசிற்கு காட்டவேண்டிய தருணம் தற்போது வந்துவிட்டது. அத்தோடு மக்கள் பலத்தை கட்டியெழுப்ப கூடிய ஒரேயொரு அமைப்பு ஐக்கிய தேசிய கட்சியே. இதனூடாக மக்கள் பலத்தை காட்டி அரசை வீழ்த்தும் தருணம் மலர்ந்துள்ளது என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
கேகாலையில் இன்று இடம் பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கு, மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கத்தால் வழங்க கூடிய நிவாரணம் ஒன்றும் இல்லை.
மக்களின் வாக்குகள் இல்லாவிட்டாலும் அந்த நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கிறது.
அரச பலத்திற்கு எதிராக மக்கள் பலத்தை மாத்திரமே பிரயோகிக்க முடியும்.
எனவே, மக்கள் பலத்தை கட்டியெழுப்ப கூடிய ஒரேயொரு அமைப்பு ஐக்கிய தேசிய கட்சியே என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment