தொழுகைக்கு சென்றவரின் வீட்டில் திருடிய பொலிஸ் கைது!
Thursday, May 29, 20140 comments
கல்முனை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள கல்முனைக்குடி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பணத்தை கொள்ளையிட்ட மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நேற்று புதன்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது,
கல்முனைக்குடி தைக்காநகர வீதியில் உள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான நேற்று அதிகாலை 5.00 மணியளவில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்குச் செல்லும் போது வீட்டை திறந்து வைத்துள்ள நிலையில் குறித்த பொலிஸ் வீட்டுக்குள் புகுந்து பணத்தை கொள்ளையிட்டபோது வீட்டின் உரிமையாளர்கள் கொள்ளையனைக் கண்டு சத்தமிட்டதையடுத்து அயலவர்கள் கொள்ளையனை மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.
இதனையடுத்து 119 பொலிஸ் அவசர சேவைக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் கொள்ளையனை கைது செய்து விசாரணை செய்த போது அவர் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment