நைஜிரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளின் இருப்பிடம் கண்டுபிடிப்பு?

Tuesday, May 27, 20140 comments

நைஜீரியா - போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த மாதம் (ஏப்ரல்) 14–ம் திகதி பாடசாலை விடுதியில் இருந்து 276 மாணவிகளை போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்தி சென்று மறைவிடத்தில் சிறை வைத்தனர்.

அவர்களை 'பாலியல்' அடிமைகளாக விற்க போவதாக மிரட்டல் விடுத்தனர். இது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நைஜீரிய இராணுவத்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதை தொடர்ந்து அவர்களை மீட்க அமெரிக்கா இராணுவத்தை அனுப்பியுள்ளது. அந்நாட்டு அரசும் மாணவிகளின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க இராணுவத்தை அப்பணியில் ஈடுபடுத்தியது.

தற்போது மாணவிகளை தீவிரவாதிகள் எங்கு மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதை இராணுவம் கண்டுபிடித்துவிட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை தலைவரான ஏர் மார்ஷல் அலெக்ஸ் பாடேஹ்  தெரிவித்துள்ளார்.

விரைவில் மாணவிகள் மீட்கப்படுவார்கள் என அலெக்ஸ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham