BBS கூறுவதுபோல் கலஹாவில் முஸ்லிம் ஆக்கிரமிப்பில்லை- தெய்யங் பாயின் மகன்

Friday, May 30, 20140 comments

முடிந்தால் நீரூபித்து காட்டடும்


(எமது விஷேட நிருபர்)

கண்டி - கலஹா, திக்கன பத்தன கிராமத்தை முஸ்லிம்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளதாக பொதுபல சேனாவின் குற்றச்சாட்டில் எவ்விதமான உண்மையுமில்லை என தெய்யங்பாயின் மகன் தையாப்தீன் முஹம்மட் சத்தார் நம்மவன் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கலஹாவில் குறித்த பிரதேசத்தில் முஸ்லிம்கள் சிங்களவர்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ளதாக பொது­ப­ல­சேனா அமைப்பின் கல்வி மற்றும் ஆய்­வுப்­பி­ரிவின் தலைவர் சமில லிய­னகே எழுதிய இந்­தப்­புத்­த­கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதை மறுத்து தெய்யங்பாயின் மகன் தையாப்தீன் முஹம்மட் சத்தார் நம்மவன் இணையத்தளத்திற்கு  மேலும் தெரிவித்ததாவது,

அதில் குறிப்பிட்டது போல் எவ்விதமான உண்மையும் இல்லை. பொதுபலசேனா அமைப்பினர் மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றனர். குறித்த செய்தியில் குறிப்பிட்டதுபோல், எனது தந்தை அரசியலில் ஈடுபட்டார். ஆனால் சிங்களவர்களின் காணிகளையு ஆக்கிரமிக்கவில்லை. 1960 ஆம் ஆண்டு தேர்லிதலின்போது எனது தந்தை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்ட பியசேன தென்னகோனை ஆதரித்தார். அதன்போது கணிசமான முஸ்லிம் குடும்பங்கள் திக்கன பத்தன பகுதியில் வசித்தனர். எனினும் தேர்தல் குறிப்பிட்ட வேட்பளர் தேர்தலில் வெற்றிவெற்றார்.

கலஹா பொலிஸ் நிலையம் இருக்கும் இடம் முதல் பத்ராவதி பாடசாலை இருக்கும் இடம் வரையிலான காணிகளை கண்டி மாவட்ட செயலகத்தினால் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. வெறும் காடாக இருந்த இப்பகுதியில் 4 சிங்கள குடும்பங்கள் 12 முஸ்லிம் குடும்பங்கள் அடங்களாக 16 குடும்பங்களுக்கு கச்சேரி (மாவட்ட செயலகம்) இலக்க குலுக்கல் அடிப்படையில் காணிகளை வழங்கியது.

பின்னர் மற்றுமொரு தேர்தலின் போது இலங்ககோனுக்கு ஆதரவு தெரிவித்து அவரை எனது தந்தை வெற்றிபெறச் செய்தார். இதன்போது தான் இப்பிரதேசத்திற்கு மின்சாரமும் குடிநீர் வசதியும் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
தற்போது இப்பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். பொதுபலசேனா கூறியிருக்கின்ற கருத்து உண்மை என்றால் அதனை நீரூபித்து காட்டடும் என்றார்.

முன்னைய செய்தியை வாசிக்க...
கலஹாவை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ளனர் - பொதுபலசேனாவின் குற்றச்சாட்டு

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham