ஞானசார தேரர் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை:-

Tuesday, April 22, 20140 comments


பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அண்மையில் நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜாதிக பல சேனா இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பினை ஞானசார தேரர் உள்ளிட்ட சிலர் சென்று தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜாதிக பல சேனா இயக்கத்தின் சில ஆவணங்களை ஞானசார தேரர் எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தவறுதலாக இந்த ஆவணங்களை எடுத்துச் சென்றதாகத் ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham